முதலில் கண்டவுடன் என்னவென்று நினைப்பதென
முழுவதும் குழம்பியது நினைவில் உள்ளது
மூன்று மாதங்கள் கழிந்த பிறகு
தோன்றியது இதுதான் எனக்கு
அடை மழையில் அகப்பட்ட ஆகாச பறவை போல
விடை கொடுக்க மனமில்லாமல் தடுமாறி நின்ற பொழுது
தடை ஏதும் சொல்லாது என் அருகே நீ நின்று
மடை திறந்த வெள்ளம் போல் பெருகிய கண்ணீரை
துடைக்க ஒரு சிநேகிதனை கண்டுகொண்டேன் அன்று!
அன்று முதல் இன்று வரை வருடங்கள் பல
சென்று விட்டன ,குழந்தைகள் பிறந்தனர் வளர்ந்தனர்
இன்று போல் நாளை இல்லை நம் வாழ்வில்- எனினும்
என்றும் குறையாமல் வளர்வது நம் காதல் ஒன்றே !
என் இனிய காதலனே நீ என் காதலன் மட்டுமல்ல
மனம் திறந்து பேச ஒரு உன்னதமான நண்பனும் நீயே
ஏனென்று கேட்காமல் என்றென்றும் என்னுடய
துணையாக நின்றுவரும் என் நிழற்குடையும் நீயே
என்னுடைய பிழைகளையும் பிடிவாதங்களையும்
பொன்னான உன் பொறுமையுடன் சகித்துக்கொண்டு
நம்முடைய வாழ்வில் நிறைகளையே பார்க்கும்
சிறப்பான குணம் கொண்ட என் கண்ணாளனும் நீயே
காதலர் தினத்தன்று கரம்பிடித்த காரணத்தால்
காதலர் தினம் என்று கொண்டாட மனமில்லை
காதலர் தினமாக அன்றாடம் தோன்றுவதால்
காதலர் தினம் போல தினம்தோறும் வாழ்ந்திடுவோம் !

Comments
Post a Comment